×

தேசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

பெரம்பலூர், அக். 4: தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு ஊக்க உதவித்தொகைகளை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தா நேற்று வழங்கினார். அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2016-2017ம் ஆண்டுக்கான விளையாட்டு ஊக்கத்தொகைகளை எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற லெப்பைகுடிக்காடு விஸ்டம் மெட்ரிக் பள்ளி மாணவன் ஹாஜிமுகம்மதுவுக்கு ரூ.10 ஆயிரம், தடகள போட்டியில் வெற்றி பெற்ற பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவி நாகப்பிரியாவுக்கு ரூ.10 ஆயிரம், ஜூடோ போட்டியில் வெற்றி பெற்ற தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவி பிரியாவுக்கு ரூ.13 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் சாந்தா வழங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு உடனிருந்தார்.

Tags : National Sports Competition ,
× RELATED பாழானது படிப்பு; வீணானது பட்ட கஷ்டம்...