×

தோகைமலை அருகே லாரி மீது பைக் மோதி தொழிலாளி பலி

தோகைமலை, அக்.4: கரூர் மாவட்டம் தோமைகலை அருகே கூடலூர் ஊராட்சி பொம்மாநாயக்கன்பட்டி வேளாளர்தெருவை சேர்ந்த ஜெகதீசன் மகன் மணி (40). கூலி வேலை செய்து வந்தார்.இவர் சொந்த வேலையாக திருச்சி சென்றுவிட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். திருச்சி-தோமைகலை மெயின் ரோட்டில் ஆர்டிமலை அருகே உள்ள கீழப்பட்டி பிரிவு ரோடு அருகே வந்தபோது முன்னாள் சென்ற டிப்பர் லாரி டிரைவர் திடீரென வலதுபுறம் திரும்பியதால் லாரி மீது பைக் மோதியது. இதில் நிலைதடுமாறிய மணி கீழேவிழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் மணியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி நேற்றிரவு இறந்தார். இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து டிப்பர் லாரி டிரைவர் திருச்சி குழுமணி சேனியர் தெருவை சேர்ந்த பெரியண்ணன் மகன் பாஸ்கர் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Dohakaimalai ,
× RELATED மைசூரில் இருந்து காய்கறி ஏற்றுக்...