×

தமிழ் வளர்ச்சித்துறை கவிதை போட்டி குளித்தலை கல்லூரி மாணவர் மாநில அளவில் முதல் இடம்

குளித்தலை, அக். 4: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு கல்லூரி மாணவர் மாநில அளவில் தமிழ் வளர்ச்சி துறை நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கானா கவிதைப் போட்டி.மதுரை உலக தமிழ் சங்கத்தில் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் குளித்தலை அரசு கல்லூரி தமிழாய்வுத் துறை முதுகலை தமிழ் முதலாமாண்டுமாணவர் சகாதேவன் கருர் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.இதையொட்டி குளித்தலை அரசு கல்லூரி முதல்வர் வாசுதேவன்(பொறுப்பு), தமிழாய்வுத் துறை தலைவர் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் முருகானந்தம், வைரமூர்த்தி, மின்னணுவியல் துறைத் தலைவர் அன்பரசு, வேதியியல் துறைத் தலைவர் பிரபாகரன், வணிகவியல் துறைத் தலைவர் அருணாசலம் மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மாணவரைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.


Tags :
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்