×

25 சதவீத தீபாவளி போனஸ் வழங்ககோரி அரசு போக்குவரத்து கழக டெப்போ முன் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 4: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் திருச்சி மண்டலம் சார்பில் கரூர் டெப்போ முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடனடியாக துவங்க வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்கவேண்டும், தீபாவளி போனஸ், ஆர்டி ஆர்சிக்கும் வழங்க வேண்டும். போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும். தீபாவளி முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும்.ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பண பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச கிளை செயலாளர் வேணுகோபால் தலைமை வகித்தார்.
கிளைத்தலைவர் இளங்கோவன், சிஐடியூ துணை பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், சிறும்பண்ணன், ஏஐடியூசி சம்மேளன துணைத்தலைவர் செல்வராஜ், மத்திய சங்க துணைத்தலைவர் ஹரீந்திரன், ஐஎன்டியூசி மண்டல செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். காமராஜ் நன்றி கூறினார்.

Tags : Trade Union Federation ,State Transport Corporation Depot ,Diwali ,
× RELATED மலையாள சினிமா படப்பிடிப்புக்காக...