×

கரூர் திருமாநிலையூரில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை மூடாததால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர், அக். 4:  கரூர் நகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் இருந்து ராயனூர் செல்லும் சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை சாலையின் இருபுறமும் குடியிருப்புகள் உள்ளன. மேலும் சாலை மிகவும் குறுகிய நிலையில் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு இரண்டு புறமும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. போலீசாரும், பொதுநல ஆர்வலர்களும் அவ்வப்போது நிலவும் நெருக்கடியை சிரமப்பட்டு சமாளித்து வரும் நிலையில் உள்ளனர்.இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த குறுகிய சாலையோரம் குடிநீர் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மேலும் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க முடியாததாக உள்ளது.எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து பணியை விரைந்து மேற்கொண்டு பள்ளத்தை சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Motorists ,Karur Thiruvananthapuram ,
× RELATED மாஸ்க் அணியாமல் ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்