×

டெப்பாசிட் தொகை திருப்பி வழங்காததால் மின்வாரிய அதிகாரிகளுக்கு ₹ 30 ஆயிரம் அபராதம் நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு

நாகர்கோவில், அக். 4: நாகர்கோவில் கே.பி.ரோடு விவேகானந்தன்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான எஸ்டேட் மாறாமலையில் உள்ளது. இங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு தங்குவதற்கு எஸ்டேட்டில் குடியிருப்பு கட்டியுள்ளார். இந்த குடியிருப்புக்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 14.10.2011 அன்று அழகியபாண்டிபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். விண்ணப்பத்துடன் ₹ 59 ஆயிரத்து 610 டெப்பாசிட் தொகையும் செலுத்தினார். ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள், வனத்துறையிடம் இருந்து தடையில்லா சான்று வாங்கிவருமாறு சுப்பிரமணியனிடம் கூறியுள்ளனர். தடையில்லா சான்று கேட்டு சுப்பிரமணியன் வனத்துறையை நாடினார். ஆனால் அவருக்கு தடையில்லா சான்று வனத்துறை வழங்கவில்லை. இதனால் அவரது குடியிருப்புக்கு மின்இணைப்பு வழங்கவில்லை.

மின்இணைப்பு வழங்காததால், டெப்பாசிட் தொகையை திரும்ப வழங்கவேண்டும். ஆனால் மின்வாரியம்  திரும்ப வழங்கவில்ைல. இதையடுத்து டெப்பாசிட் தொகையை பெற்று தருமாறு மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணி, உறுப்பினர் சங்கர் ஆகியோர் பார்வதிபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், அழகியபாண்டிபுரம் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஆகியோர் சுப்பிரமணியன் வழங்கிய டெப்பாசிட் தொகை ₹ 59 ஆயிரத்து 610யை திரும்ப வழங்கவேண்டும். மேலும் சுப்பிரமணியனுக்கு நஷ்டஈடாக ₹ 20 ஆயிரம், வழக்கு செலவு ₹ 10 ஆயிரம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.


Tags : Consumer Ombudsman ,Court ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி,...