×

ராணித்தோட்டம் பணிமனை முன்பு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக்.4: நாகர்கோவில் ராணித்தோட்டம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக  அரசு மின்வாரிய ஊழியர்களுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் 2.57 சதவீதம் ஊதிய  உயர்வு வழங்கியது. ஆனால் போக்குவரத்து ஊழியர்களுக்கு மற்ற அனைத்து  துறைகளையும் விட குறைவான ஊதிய உயர்வு வழங்கியதை கண்டித்தும், வழங்கப்பட்ட  குறைந்த ஊதிய உயர்விலும் மோசடி நடந்துள்ளதை கண்டிப்பது, 6 ஆண்டுக்கு மேல்  பணிபுரியும் அனைவருக்கும் அடிப்படை சம்பளத்தில் ரூ.500 முதல் ரூ.4000 வரை  மோசடி செய்யப்பட்டுள்ளதை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக பணிமனைகள் முன் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற்கூட்டம் நடந்தது.

நாகர்கோவில்  ராணித்தோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச கிளை செயலாளர்  சிவன்பிள்ளை தலைமை வகித்தார். தொமுச  தலைவர் பால்ராஜ், சிஐடியு செயலாளர்   சங்கரநாராயணன், எச்எம்எஸ் மாவட்ட தலைவர் லட்சுமணன், எஐடியுசி ஆறுமுகம்,  சிடிஎஸ்எப் பத்மநாபபிள்ளை முன்னிலை வகித்தனர். தொமுச மாவட்ட கவுன்சில்  செயலாளர் ஞானதாஸ், சிஐடியு பொது செயலாளர் ஜெயகுமார், எச்எம்எஸ் தலைவர்  முத்துகருப்பன் மற்றும் தயானந்தன், சந்தானம் நாகராஜன், செல்லசிவலிங்கம்,  மகாராஜாபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். சிஐடியு செயல் தலைவர் லட்சுமணன்  நிறைவு செய்தார். கனகராஜ் நன்றி கூறினார்.


Tags : Trade Unions ,Ranithottam Workshop ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...