×

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி அமைப்பு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் ஆலோசனை நாகர்கோவிலில் நடந்தது

நாகர்கோவில், அக்.4:  உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி அமைப்பு தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இதில் வாக்குச்சாவடிகள் தயார் படுத்துவது, வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையை இறுதி செய்வது தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக அனைத்து கட்சி  பிரதிநிதிகளுடன் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:  வாக்குச்சாவடிகள் வாக்காளர்கள் அமைவிடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இடம்பெற்றுள்ளதா? நீண்ட தூரங்களில் வாக்குச்சாவடிகள் அமைய பெற்றிருந்தால் அது தொடர்பாக புகார் அளித்தால் வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இது தொடர்பாக எழுத்து பூர்வமான புகார்களை அளிக்கலாம். 1500 வாக்காளர்களுக்கு மேல் ஒரு வாக்குச்சாவடியில் இடம்பெற்றிருந்தால் வாக்குசாவடியை பிரிக்கவும், அருகே புதிய வாக்குச் சாவடியை உருவாக்கவும் விதிகளின்படி நடவடிக்ைக எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.கூட்டத்தில் திமுக சார்பில் வக்கீல் லீனஸ்ராஜ், வர்க்கீஸ், காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் ஜெயகோபால், ஜோஸ்பின் வின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மோகன், தேமுதிக சார்பில் மணிகண்டன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,consultation ,party representatives ,election ,Nagercoil ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...