×

மன்னார்குடி அரசு கல்லூரியில் என்சிசி கூட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா

மன்னார்குடி, அக். 4: மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசுக்கல்லூரியில் 10 நாட்களாக நடைபெற்று வந்த என்சிசி வருடாந்திர கூட்டு பயிற்சி முகாம் நிறைவடைந்தது.தமிழகத்தில் ஆண்டுதோறும் பல்வேறு அரசுக்கல்லூரிகளில் என்சிசி வீரர் களின் மாநில தழுவிய கூட்டு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரியில் வருடாந்திர என்சிசி கூட்டு பயிற்சி முகாம் கடந்த 24 ம் தேதி துவங்கியது.இம்முகாமில் டெல்டா மாவட்டங்களிலிருந்து 25 அரசு பள்ளி, 7 அரசு கல் லூரி களில் இருந்து சுமார் 500 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி பெற்றனர். தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெற்ற முகாமில் துப்பாக்கி சுடுதல், எல்லைகள் மற்றும் வரைபடங்கள் கண்டு பிடித்தல், தனிநபர் ஒழுக்கம், தலைமை பண்பு, தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு, நீர் மேலாண்மை, நதிநீர் தூய்மை, பேரிடர் மீட்பு பணிகள் ஆகியவை குறித்து தலைசிறந்த என்சிசி பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு பயிற்சியளித்தனர்.

இந்நிலையில் முகாமில் நிறைவு விழா நேற்று முன்தினம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல் வர் (பொ ) ரவி தலைமை வகித்தார். முகாமில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து கல்லூரியின் என்சிசி அலுவலர் லெப் ராஜன் பேசினார். முகாமில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கும்ப கோணம் 8 வது பட்டாலியன் தேசிய மாணவர் படை கமாண்டர் அதிகாரி லெப் கர்னல் வினோத், என்சிசி நிர்வாக அலுவலர் லெப் கர்னல் உன்னி கிருஷ்ணன் நாயர் ஆகியோர் பரிசளித்து பாராட்டி பேசினர்.நிகழ்ச்சியை என்சிசி அலுவலர் டேனியல் ராஜாஜி தொகுத்து வழங்கினார். முன்னதாக என்சிசி அலுவலர் திவாகர் வரவேற்றார். முடிவில் லதா நன்றி கூறினார்.

Tags : NCC Joint Training Camp ,Mannargudi Government College ,
× RELATED வார்டு உறுப்பினர்களுக்கு...