×

காந்திஜெயந்தி விடுமுறை தினத்தில் அனுமதியின்றி மது விற்ற 7 பேர் மீது வழக்கு

வலங்கைமான், அக்.4: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு பகலாகவும், அரசு விடுமுறை தினங்களிலும் போலி மதுபாட்டில்கள் மற்றும் எரிசாராயம் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனையடுத்து திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு சிறப்பு தனிப்படையினர் வலங்கைமான் காவல் துறையினருடன் இணைந்து பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் திருவேணமங்கலம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(45), கும்பகோணம் தாலுகா தென்னூர் பகுதியை சேர்ந்த விவேக்(29), ஆவூர் பகுதியை சேர்ந்த அய்யாப்பிள்ளை(48), சித்தன்வாழூர் பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி(62), நார்த்தாங்குடி பகுதியை சேர்ந்த ரமேஷ்(32), பாடகச்சேரி சுரக்குடி பகுதியை சேர்ந்த ராவணன்(70) மற்றும் நார்த்தாங்குடி பகுதியை சேர்ந்த முருகையன்(45) ஆகியோர் அப்பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து வலங்கைமான் போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட ஏழுபேர் மீது வழக்குபதிவு செய்தனர்.இதில் திருவேணமங்கலம் மற்றும் சித்தன்வாழூர் பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி பெயர்கொண்ட இருவரிடமும் தலா 105 லிட்டர் வீதம் 210 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. அதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக ஐந்துபேரிடம் முப்பதுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

Tags : persons ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது