×

திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நடும் பணி

திருத்துறைப்பூண்டி, அக்.4: திதிருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளார் சிவகுமார் அறிவுறுத்தலின்பேரில் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளார் ஜெயந்தி மேற்பார்வையில் இளநிலை பொறியாளார் ரவி தலைமையில் திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலை, திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலை, திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலை ஒரங்களில் 1000 மரகன்றுகள் நட்டு பாரமரித்து கண்காணித்து வருகின்றனர். கஜாபுயலில் மரங்கள் முற்றிலும் சேதம் அடைந்ததால் சாலைகளில் மரகன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதுவரை 1000க்கு மேற்பட்ட மரகன்றுகள் நடபட்டுள்ளது. தொடர்ந்து நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடரும் என்று நெஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளார் ஜெயந்தி தெரிவித்தார்.

Tags : Tirupur ,
× RELATED தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் தொட்டியில் நாற்று நடவு பணி நிறைவு