×

அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருந்தாளுநர்கள் நியமிக்க வலியுறுத்தல்


நாகை, அக்.4:அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருந்தாளுநர்களை நியமிக்க வலியுறுத்தப்பட்டது.உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு நாகையில் மருந்தாளுநர் கூட்டம் நடந்தது. மருந்துகிடங்கு அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செந்தில்குமார் வரவேற்றார். செல்லத்தாயி முன்னிலை வகித்தார். துணை இயக்குநர் (காசநோய்) முருகப்பன் பேசினார். காசநோய் பிரிவில் உள்ள மருந்தாளுநருக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மருந்தாளுநர்கள் பூமாதேவி, சோமசுந்தரம், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முரளிதரன் நன்றி கூறினார்.

Tags : pharmacists ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு...