×

நாகை மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்

சீர்காழி, அக்.4: சீர்காழியில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கலைவாணன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏக்கள் வக்கீல் பன்னீர்செல்வம், டாக்டர் பன்னீர்செல்வம், அருள்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், சத்தியேந்திர தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் மாவட்ட பொருளாளர் ஜி என் ரவி முன்னிலை வகித்தனர். மாநில பொறியாளர் அணி செயலாளர் துரை..சரவணன் ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மயிலாடுதுறை எம்பி.ராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினர்.கூட்டத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவின் மூன்றாவது பெரிய அணியாக வெற்றிபெற்று சாதனை படைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பது.

பொறியாளர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டினால் கட்டுமான பணி தடைப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. கட்டுமான பொறியாளர்கள் தொழில் செய்ய முடியாமல் உள்ளனர். தட்டுபாடின்றி மணல் கிடைத்திடவும், குறைந்தவிலையில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நாகை மாவட்டத்தினை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி நீர்மேலாண்மையை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிக்குமார், சேதுரவிக்குமார் மலர்விழி திருமாவளவன் பேரூர் கழக செயலாளர் அன்புச்செழியன் மற்றும் பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர். முடிவில் நகர பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags : Nagai District ,Agricultural Zone ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...