வெளியூர் சென்றிருந்தவர் வீட்டில் கள்ளச்சாவி கொண்டு திறந்து 9 பவுன் நகை கொள்ளை

நாகை, அக்.4: நாகையில் வெளியூர் சென்றிருந்தவர் வீட்டின் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நாகை பப்ளிக் ஆபீஸ் சாலை குமரன் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமதி(40). இவர் கடந்த 27ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு காரைக்கால் அருகே நிரவி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது மர்ம நபர்கள் முன்பக்க கதவின் பூட்டை மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 9 பவுன் நகையை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுமதி நாகை வெளிப்பாளையம் போலீசில் நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED திருச்சி நகைக்கடை கொள்ளை 4 கிலோ நகைகளை மீட்பதில் திணறல் கி