×

நிர்வாகிகள் தேர்வு

திருவள்ளூர், அக் 4:  திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் செங்குந்தர் சமூக நலச்சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது.செங்குந்தர் சமூக நலச்சங்க நிர்வாகிகள் தேர்தல் அலுவலர்கள் டி.இ.கிருபானந்தம், வி.ஜி.கங்காதரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், தலைவராக எஸ்.என்.தியாகராஜன், செயலாளராக கே.என்.அண்ணாமலை, பொருளாளராக கே.குமரவேல், துணைத்தலைவர்களாக எஸ்.விஸ்வநாதன், எஸ்.என்.தட்சணாமூர்த்தி, இணை செயலாளர்களாக ஆர்.எம்.கன்னியப்பன், எம்.கணேசன், சமூக மக்கள் தொடர்பு அலுவலராக எஸ்.ஏ.ராமலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பினை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், இளைஞரணி, நெசவாளர் அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, மகளிரணி, மாணவரணி, என அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : administrators ,
× RELATED ஒன்றிணைவோம் வா செயல் திட்டம் மூலம்: 10...