×

ஆர்.கே.பேட்டை அருகே காந்தி பிறந்தநாள் விழா

பள்ளிப்பட்டு, அக். 4: ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் நகர காங்கிரஸ் சார்பில், காந்தியடிகள் 150 பிறந்த நாள் விழா, காமராசர் நினைவு நாள் நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன. இந்நிகழ்ச்சியொட்டி காமராஜர் சிலைக்கு நகர காங்கிரஸ் தலைவர் சி.ஜி.கார்த்திகேயன் தலைமையில் மாநில நெசவாளரணி தலைவர் ஜி.என்.சுந்தரவேல் மாலை அணிவித்தார். பின்னர், அங்கிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் கதர் ஆடை அணிந்து ஊர்வலமாக பாதயாத்திரை மேற்கொண்டனர். பாதயாத்திரையானது, பல்வேறு தெருக்களின் வழியாக அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள காந்தி சிலையருகில் முடிவடைந்தது. பின்னர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இருநூறு பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி எம்.ஏ.கணபதி, நிர்வாகிகள் ஜி.எஸ்.ராதன், வி.ராமலிங்கம், எஸ்.எஸ்.மணிகண்டன், ஏ.இ.துளசிராமன், கே.எம்.பச்சையப்பன், கே.ஜி.பாண்டுரங்கன், பி.ஏ.ராஜேந்திரன், இமாச்சலப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Gandhi ,Birthday Party ,RK Pate ,
× RELATED இந்திரா காந்தியின் பெருமையை நேற்று...