×

கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில வாலிபர் கல்லால் அடித்து கொலை

கும்மிடிப்பூண்டி, அக். 4: கும்மிடிப்பூண்டி அருகே நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காரணத்தால் வடமாநில வாலிபர் கல்லால் அடித்து  படுகொலை செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த தாமரைக்குளம் பகுதியில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு முகம் நசுங்கிய நிலையில் 37 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் பிணமாக கிடந்தார். இதை அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 பிறகு வழக்கு பதிவு செய்து இரண்டு குழுக்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், ஒடிசாவை சேர்ந்த ராமச்சந்திரா பத்தரா (37) என தெரியவந்தது. இவர், எளாவூர் சின்ன ஓபுளாபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் பீகாரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சர்மா (28). இவர்கள் இருவரும்  செப்டம்பர் 29ம் தேதி இரவு மது அருந்துவதற்காக தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர். இதில் கொலை செய்யப்பட்ட நபருக்கும், இவருடைய நண்பர் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு காரணமாக சந்தோஷ் குமார் ஹாலோ பிளாக் கல்லைக் கொண்டு முகத்தில் அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.  இதை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார் பீகார் மாநிலம் சென்று  சந்தோஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Gummidipoondi ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது