×

மணமேல்குடி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்

மணமேல்குடி,அக்.4: மணமேல்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர் வீரப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் திட்டம், போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலர் ராஜா உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் காரக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி செயலர் அருள்ஞானமுத்து, தலைமையில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.

Tags : meeting ,Sabha ,Manamelgudi Union ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை