×

மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் தேங்கிய 12 டன் ஆவணங்கள்

திருவள்ளூர், அக். 4: திருவள்ளூர் மாவட்டஎஸ்.பி., அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் 2005ம் ஆண்டு முதல் கழிவு செய்யப்படாமல் இருந்த முடிவுற்ற 12 டன் ஆவணங்கள், கரூர் காகித ஆலையில் ஒப்படைக்கப்பட்டது.எஸ்.பி.,யின் அதிரடியால், போலீஸ் நிலையங்கள் எலிகள் தொல்லையின்றி ‘‘பளீச்’’ என உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய 5 போலீஸ் சப் - டிவிஷன்களுக்கு உட்பட்டு, 29 போலீஸ் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன.

மாவட்ட எஸ்.பி., அலுவலகம் மற்றும் 29 போலீஸ் நிலையங்களில், முடிவுற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி, அடி, த உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் எப்.ஐ.ஆர்., காப்பிகள், பொதுமக்களிடம் பெறப்பட்ட வழக்கு சார்ந்த மனுக்கள், நிலைய பணிக்கான ஆவணங்கள் உள்ளிட்டவை கடந்த 2005ம் ஆண்டு முதல் கழிவு செய்யப்படாமல் வைக்கப்பட்டு இருந்தன. இதனால், எலிகள் தொல்லை அதிகரித்ததோடு, வழக்கு தொடர்பான ஆவணங்களை எலிகள் குதறி உணவாக்கிக் கொள்கின்றன. கம்ப்யூட்டர் வயர்களும் சேதப்
படுத்தப்படுகின்றன.

இதனால் எலிகள், விஷப்பூச்சிகளின் கூடாரமாக நிலையங்கள் மாறி இருந்தது. இதையடுத்து, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த  நாளில், தூய்மை இந்தியா திட்டத்தின்பேரில், அனைத்து பிரிவுகளிலும் 2005ம் ஆண்டு முதல் கழிவு செய்யப்படாமல் தேங்கிக் கிடந்த, முடிவுற்ற அனைத்து வகையானஆவணங்களை கண்டறிந்து சேகரிக்க 6 குழுக்களை எஸ்.பி., அரவிந்தன் அமைத்தார். அக்குழுவினர் 12 டன் காகித கழிவுகளை சேகரித்தனர். அதில், முதற்கட்டமாக 7 டன் காகித கழிவினை, கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கு, காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் கொண்டுசென்று ஒப்படைத்தனர். மீதமுள்ள கழிவுகள் அடுத்த கட்டமாக கொண்டு செல்லப்பட உள்ளன. எஸ்.பி.யின் நடவடிக்கையால் அனைத்து காவல் நிலையங்களும் காகித கழிவுகள் இன்றி பொலிவுடன் உள்ளன.


Tags : police stations ,district ,
× RELATED சென்னையில் உரிமம் பெற்ற 2,125...