×

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்

பள்ளிப்பட்டு, அக். 4: ஆர்.கே.பேட்டை அருகே, குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனூர் காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குழாய்கள் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.கோடை காலத்தில் ஏற்பட்ட வறட்சியில் ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டது. இந்நிலையில், அப்பகுதி பெண்கள் விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருவதால், கடும் அவதிப்படுகின்றனர். இருப்பினும், குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று குடங்களுடன் வங்கனூர் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.தகவல் அறிந்து விரைந்து வந்த, வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்று உறுதி கூறியதை ஏற்று மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


Tags : women ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது