×

போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க கோரி ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி. அக்.4: பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக டிப்போ முன்பு எல்பிஎப், சிஐடியூ, ஏஐடியூசி, டிடிஎஸ்எப், ஏஏஎல்எல்எப், எம்எல்எப் ஆகிய போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்பிஎப் கிளைத் தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார். செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி ராஜேந்திரன், பணியாளர் சங்க ராஜசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகராஜன், சிஐடியூ கிளைச்செயலாளர் கண்ணன், ஓய்வு பெற்ற நிர்வாகிகள் சிவஞானம். சின்னச்சாமி. தங்கமணி ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து துவக்க வேண்டும், 2003 ஆண்டிற்கு பிறகு சேர்ந்த தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன் எல்பிஎப் கிளை நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Transit union unions ,wage agreement negotiations ,
× RELATED அனுமதியின்றி மது விற்ற ஒருவர் கைது