×

தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு கோபுராஜபுரம் வாய்க்காலை தூர்வாராததால் செடிகள் மண்டி கிடக்கும் அவலம்

பாபநாசம், அக். 4: கோபுராஜபுரம் வாய்க்காலை தூர்வாராததால் செடிகள் மண்டி கிடக்கிறது. எனவே வாய்க்காலை விரைந்து தூர்வார வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். பாபநாசம்- சாலியமங்கலம் மெயின் சாலை வழியாக கோபுராஜபுரம் வாய்க்கால் செல்கிறது. பாசன வாய்க்காலான கோபுராஜபுரம் வாய்க்காலை தூர்வாராத காரணத்தால் செடிகள் மண்டி நீரின் போக்கை தடுக்கிறது. மேலும் இந்த வாய்க்காலில் வீடுகளின் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகின்றது.

இதுகுறித்து பாபநாசம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பாபநாசத்தில் பெய்கிற மழைநீர் வடிய பயன்பட்ட அன்னுக்குடி வாய்க்கால் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகளால் தூர்க்கப்பட்டு விட்டது. இதுபோன்று திருப்பாலத்துறையில் மழைநீர் வடிகின்ற திருப்பாலத்துறை வாய்க்கால் தூர்வாரப்படாமல் தூர்க்கப்பட்டு விட்டது. பாபநாசம் வழியாக செல்கிற பாசன வாய்க்காலான கோபுராஜபுரம் வாய்க்காலும் முழுமையாக தூர்வாரப்படாமல் செடிகள் மண்டி பாசனத்துக்கு பாய்கின்ற நீரின் போக்கை தடுக்கிறது. இதில் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகின்றது. எனவே வாய்க்காலை முழுமையாக தூர்வாருவதுடன் இந்த பாசன வாய்க்காலில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்றனர்.

Tags : plants ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்