×

அடிப்படை வசதி செய்து தராவிட்டால் தாராசுரம் பேரூராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் முடிவு

கும்பகோணம், அக். 4: அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் தாராசுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் கருத்துரை வழங்கினார்.
கூட்டத்தில் தாராசுரத்தில் உள்ள 15 வார்டுகளிலும் இளைஞரணி உறுப்பினர்களை சேர்ப்பது, வாக்காளர் சேர்த்தல், நீக்கல் பணிகளை திறம்பட செய்வது. 15 வார்டுகளிலும் பொது உறுப்பினர் கூட்டம் நடத்தி தகுதியான நபர்களை உள்ளாட்சி தேர்தலில் நிறுத்துவதற்கு தேர்வு செய்வது.

தாராசுரம் பகுதியில் குடிநீர் கலங்கல் வருவதை தடுக்க வேண்டும். மழை காலங்களில் முக்கிய தெரு மற்றும் கடைவீதி போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும். சேகரிக்கும் குப்பைகளை ஆங்காங்கே தீயிட்டு கொளுத்துவதை தடுக்க வேண்டும். போதிய பராமரிப்பு இல்லாததால் மழை காலங்களில் சாக்கடை கழிவுநீரும் மழை நீரும் சேர்ந்து சாலைகளில் ஓடுகிறது. எனவே இதை தாராசுரம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்யாவிட்டால் பொதுமக்களையும் திரட்டி பேரூராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், சுவாமிமலை பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் பேரூர் செயலாளர் கோமணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : facilities ,assembly meeting ,DMK ,
× RELATED ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம்