×

வீடுகளில் இருந்து வெளியேறி தேனம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு

காஞ்சிபுரம், அக்.4: காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி, கிராம பொதுமக்கள் கலெக்டர் பொன்னையாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் ஏரிப் பாசனத்தை நம்பி சுமார் 700 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் இந்த ஏரி சுற்று வட்டார பகுதிகளுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் இருந்து வருகிறது.தேனம்பாக்கம், தேனம்பாக்கம் காலனி, விஷ்ணு நகர், காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக, தேனம்பாக்கம் ஏரியின் அருகில் 25க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்கின்றனர்.

இந்நிலையில் தேனம்பாக்கம் ஏரிக்கு 2 நீர்வரத்துக் கால்வாய்கள் உள்ளன. இந்த நீர்வரத்துக் கால்வாய்கள் வழியாக காஞ்சிபுரம் ஜெம் நகர் முதல் சதாவரம் வரை உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது. இந்த கழிவுநீர், தேனம்பாக்கம் ஏரியை வந்தடைகிறது. இதனால் ஏரியில் உள்ள நீர் மாசடைவதுடன், நிலத்தடி நீரும் பாதிப்படைகிறது.எனவே தேனம்பாக்கம் ஏரிக்கு வரும் வரத்து கால்வாய்களில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : lake ,evacuation ,houses ,Thenambakkam ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு