×

அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திருச்சி மண்டலம் ரூ.3,500 கோடி வர்த்தகம் புரியும்

கும்பகோணம், அக். 4: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கும்பகோணம் கிளை, நாகேஸ்வரன் கோயில் சன்னதி தெருவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திருச்சி மண்டல மேலாளர் நடராஜன் தலைமை வகித்தார். புதிய கட்டிடத்தை ராமநாதன் திறந்து வைத்தார். புதிய கட்டிடத்தில் கீதா வெங்கட்ராமன் குத்துவிளக்கு ஏற்றினார். பாதுகாப்பு பெட்டகத்தை குமரேசன் திறந்து வைத்தார். கணினி சேவையை கணேஷ் துவக்கி வைத்தார். இ சேவையை சந்திரசேகரன் துவக்கி வைத்தார். விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி திருச்சி மண்டல மேலாளர் நடராஜன் பேசுகையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் திருச்சி மண்டத்தில் 9 மாவட்டங்கள் அடங்கும். இதில் மொத்தம் 35 கிளைகள் உள்ளது. 35 கிளைகளும் வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறப்பான சேவையை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதியுடன் கூடிய இந்த டிஎம்பி கிளை சென்னை, மும்பை போன்ற பெரிய நகரங்களில் வழங்கப்படும் சேவையை போல் இந்த கிளைகளிலும் வழங்கப்படும்.

1921ல் துவங்கப்பட்ட டிஎம்பி இன்று வரை லாபகரமாக தொடர்ந்து செயல்படுகிறது. இன்று டிஎம்பியில் வராக்கடன் மிகமிக குறைவாக உள்ளது. டிஎம்பியின் முன்னேற்றத்துக்கு வாடிக்கையாளர்களும், வங்கி பணியாளர்களும் தான் முக்கிய காரணம். இன்று டிஎம்பி சார்பில் அளிக்கப்படும் அனைத்து கடன்களும் வட்டி வகிதம் மிகவும் குறைவு. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் திருச்சி மண்டலம் சார்பில் ரூ.3,500 கோடிக்கு வர்த்தகம் புரிந்து சாதனை படைக்கும் என்றார். விழா ஏற்பாடுகளை மண்டல முதன்மை மேலாளர்கள் கண்ணன் மற்றும் விக்கிரம ஆதித்தன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்திருந்தனர். முடிவில் கும்பகோணம் டிஎம்பி கிளை மேலாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu Mercantile Bank Trichy Zone ,
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...