×

நெல்லுக்கான கொள்முதல் விலை 2 நாட்களில் அறிவிக்கப்படும் அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

கும்பகோணம், அக்.4: நெல்லுக்கான கொள்முதல் விலை 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் 14 புதிய பேருந்துகள் இயக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு தஞ்சை, திருப்பூர், காரைக்கால், திருவாரூர், சிதம்பரம், மயிலாடுதுறை பகுதிகளுக்கு 14 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தார். பின்னர் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அளித்த பேட்டி: தஞ்சை வருவாய் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தேன்.

அதற்கு கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு முன்பு உரிய ஆய்வு செய்து தேவைப்பட்டால் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கரவாண்டி ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களிலும் அதிமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும். அங்கு அதிமுக சார்பில் பணம் வழங்கப்படும் என்பது பொய்யான குற்றச்சாட்டாகும். நெல்லுக்கான கொள்முதல் விலை இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED முட்டையின் கொள்முதல் விலை குறைவு