×

கும்பகோணம் வழியாக ராமேஸ்வரம்- ஹரித்துவாருக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் உபயோகிப்பாளர் சங்கம் மனு

கும்பகோணம், அக். 4: கும்பகோணம் வழியாக ராமேஸ்வரம்- ஹரித்துவாருக்கு புதிய ரயில் இயக்க வேண்டுமென ரயில் உபயோகிப்பாளர் சங்கம் மனு அளித்துள்ளது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளரிடம் திருச்சி கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் பாபநாசம் வழியாக வாரம்தோறும் திங்கள், வியாழன், சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் திருப்பதிக்கு இயக்கப்படும் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

மதுரை- சென்னை மகால் அதிவிரைவு ரயில் கும்பகோணத்துக்கு நள்ளிரவு 1 மணிக்கு வருவதை இரவு 11 மணிக்கு வருமாறு கால அட்டவணையை மாற்ற வேண்டும். தஞ்சை, கும்பகோணம் வழியாக ராமேஸ்வரம் ஹரித்வார் இடையே புதிய ரயிலை இயக்க பரிசீலனை செய்ய வேண்டும். மயிலாடுதுறை- பழநியை இணைக்கும் வகையில் தினசரி ரயில் அறிமுகப்படுத்த வேண்டும். பாபநாசம் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம்- சென்னை போட் மெயில் நின்று செல்லவும், முன்பு மீட்டர் கேஜ் பாதையில் மெயின்லைன் வழியாக இயக்கப்பட்ட தூத்துகுடி- சென்னை ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Railway ,Rameswaram-Harithwar ,
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...