14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்ககோரி அனைத்து சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

தஞ்சை, அக். 4: போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடன் துவக்கி பேச வலியுறுத்தி தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்து நகர் பணிமனை முன் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கி பேசி முடிக்க வேண்டும். கடந்த ஒப்பந்தத்தில் 12 மாத ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். 01.04.2003க்கு பிறகு பணி யில் சேர்ந்த 80,000 பேரையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி ஆணை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. சிஐடியூ மத்திய சங்க துணை செயலாளர் ராமசாமி, கிளை நிர்வாகிகள் தினகரன், சந்திரசேகரன், ஏஐடியூசி பொது செயலாளர் சுந்தரபாண்டியன், கவுரவ தலைவர் துரை.மதிவாணன், கிளை தலைவர் சந்திரன், ஐஎன்டியூசி கிளை செயலாளர் மணிகண்டன், மத்திய சங்க நிர்வாகி சரவணன், தொமுச கிளை நிர்வாகிகள் ரகுபதி, ராமச்சந்திரன் பங்கேற்றனர்.

Tags :
× RELATED 14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்