×

ஆயுதப்படை காவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி துவக்கம்

தஞ்சை, அக். 4: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 200 ஆயுதப்படை காவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த 3 நாள் பயிற்சி துவங்கியது. எஸ்பி மகேஸ்வரன் தலைமை வகித்தார். ஆயுதப்படை டிஎஸ்பி முருகேசன் முன்னிலை வகித்தார். சென்னை அதிதீவிர பயிற்சி பள்ளியை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான 8 பயிற்சியாளர்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனர். இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த தலா 50 ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 3 நாட்களுக்கு பேரிடர் மேலாண்மை, இயற்கை இடர்பாடுகளிலிருந்து மக்களை காக்கும் பயிற்சி, வெள்ள காலங்களில் மீட்பு பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

Tags : Commencement ,Armed Forces ,
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...