×

வளமீட்பு மையம் துவக்கம்

தாம்பரம்: மேற்கு தாம்பரம் கன்னடபாளையத்தில் நகராட்சி சார்பில்  புதியதாக வளமீட்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையா ராஜா துவங்கி வைத்தார். உடன் சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், ஜனார்த்தனம், காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பைய ராஜா கூறுகையில், ‘‘வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் செருப்பு, ரெக்சின்பேக், மெத்தை, தெர்மாகூல், இ-வேஸ்ட், அபாயகரமான கழிவுகள், உபயோகமற்ற துணிகள் போன்றவை சேகரிக்கப்படுகிறது. எனவே, மேற்கு தாம்பரம் 33, 37, 38 மற்றும் 32வது வார்டுகளை சேர்ந்தவர்கள், தேவையற்ற மேற்குறிப்பிட்ட பொருட்கள் இருப்பின் குப்பையில் சேர்த்து கொடுக்காமல், கன்னடபாளையம் வளமீட்பு மையத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Resource Center Launch ,
× RELATED வளமீட்பு மையம் துவக்கம்