×

அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் திடீர் முற்றுகை

செய்யூர், அக்.2: காவனூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி, கிராம மக்கள் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சித்தாமூர் ஒன்றியத்தில் அடங்கிய காவனூர், கொளத்தூர், பள்ளம்பாக்கம் ஆகிய கிராம மக்கள், தங்களது கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர், தெரு விளக்குகள், நூறு நாள் வேலை திட்டம் ஆகிய பிரச்னைகள் குறித்து, வட்டார வளர்ச்சி  அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் அளித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால், மேற்கண்ட கிரமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நேற்று திரண்டனர். அங்கு, திடீரென முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் கிளை செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.
அப்போது, குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள நூறு நாள் வேலையை மீண்டும் வழங்க வேண்டும். பழுதடைந்த தெரு விளக்குகளை  உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாணி மற்றும் சித்தாமூர் போலீசார், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, அவர்களது கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags : blockade ,facilities ,Regional Development Office ,
× RELATED திருமங்கலத்தில் ஒரு நாள் முழுவதும் ரயில்வேகேட் அடைப்பு: பொதுமக்கள் அவதி