வேலையில்லாத சிறுபான்மையினருக்கு நாளை முதல் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி

காஞ்சிபுரம், அக்.2: கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை. தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன் டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் ஆயத்த ஆடை பயிற்சி  மற்றும் வடிவமைப்பு மையம் மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கும், பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இதில் எம்பிராய்டரி பயிற்சி 50 பேருக்கு 3 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின்  பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குடும்ப ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சியின் போது ஒருவருக்கு ₹1000 உதவித்தொகை அளிக்கப்படும். உண்டு உறைவிட கட்டணம் ஏதும் வழங்கப்படாது. இதற்கான நேர்காணல், திருவள்ளூர் மாவட்டத்தில் எண்.1டி, முதல் குறுக்கு தெரு, சிவி நாயுடு தெரு, ஜெயா நகர்,  திருவள்ளூர் மாவட்டம் - 602001 என்ற முகவரியில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் நாளை  (3ம் தேதி) காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது.இதில்  பயிற்சி பெற விரும்புவோர் சாதி, வருமானம், ஆதார் அட்டை, கல்வி ஆகிய அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம், ஏவரஸ்ட், உதவி மண்டல மேலாளர் - 9380513874, தமிழ்நாடு  சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை, தொலைபேசி - 044-28514846) ஆகியோர்களை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : minorities ,
× RELATED திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை...