×

சர்வதேச முதியோர் தின விழா

உத்திரமேரூர், அக். 2: உத்திரமேரூர் அருகே வாடாநல்லூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் சர்வதேச முதியோர் தினவிழா நேற்று நடந்தது. டாக்டர் பக்தா ரெட்டி தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர் சுஜாதா, தன்னார்வலர்கள் பீயுஷா, தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு இடையே பேச்சு, கவிதை, விளையாட்டு, மாறுவேடம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  அதில் கலந்து கொண்ட அனைத்து முதியோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. உத்திரமேரூர் வட்ட சட்ட பணிகள் குழுத் தலைவரும் உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான இருதயராணி கலந்து கொண்டு, சட்ட ரீதியாக முதியோர்களுக்கு ஜீவனாம்சம் பெறுவதன் வழிமுறைகள்,  முதியோர் உதவி தொகை பெறுதல், முதியோர்களுக்கான அரசு திட்டங்களை பெறும் வழிமுறைகள் உள்பட பல்வேறு சட்ட ரீதியான பிரச்னைகள் குறித்து விளக்கினார்.

Tags : Elderly Day Festival ,
× RELATED உலக முதியோர் தினவிழா