திருத்தணி அருகே முன்னாள் ஊராட்சி தலைவரிடம் ₹48 ஆயிரம் அபேஸ்

திருத்தணி, அக். 2: திருத்தணி அடுத்த பெருமாள்தாங்கல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (52). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவர்  நேற்று மதியம் தனது இரு சக்கர வாகனத்தில் திருத்தணியில் உள்ள தனியார் வங்கிக்கு  சென்று ₹48 ஆயிரம் எடுத்தார். பின்னர், திருத்தணியில் உள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு அடகு வைத்த நகையை மீட்க வந்தார். அவர் அருகே வந்த நான்கு மர்ம வாலிபர்கள், நான்கு பத்து ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு, உங்கள் பணம் கிழே விழுந்துள்ளது என கூறியுள்ளனர். அதற்கு அவர், பணம் என்னுடையது இல்லை என சொன்னார். பின்னர் இரு வாலிபர்கள்  வங்கி வெளியே வந்து,  இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்கில் இருந்து, “பெட்ரோல் வீணாக செல்கிறது” என  சண்முகத்திடம் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சண்முகம், கையில் வைத்திருந்த பணத்துடன் வந்து, பணத்தை வண்டியின் சீட்டு மேல் வைத்துவிட்டு பெட்ரோல் பைப்யை சரி செய்ய முயன்றார். அப்போது, பணத்தை திருடிக் கொண்டு நான்கு பேரும் அங்கிருந்து தப்பி  ஓடினர். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அதில் பதிவானகாட்சிகளை வைத்து  4 வாலிபர்களை தேடி வருகின்றனர்

Related Stories: