×

ரூ.50 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, அக். 2:அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ரூ.50 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்  நடைபெற்றது. இதில், சென்ற வாரத்தை விட, 700 மூட்டைகள் நிலக்கடலை வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அவிநாசி ஒன்றியத்தில் 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1500 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நிலக்கடலை விதைப்பு செய்துள்ளனர்.

நிலக்கடலைப்பயிர் அறுவடை காலம் ஆனதால், சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்றது. ஏலத்தில், மொத்தம் 2847 நிலக்கடலை மூட்டைகளை ஏலத்திற்காக கொண்டு வந்திருந்தனர். குவின்டாலுக்கு நிலக்கடலை முதல் ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.7150 முதல் ரூ.7750 வரையிலும்,  இரண்டாவது ரகம் (காய்ந்தது) நிலக்கடலை ரூ.6700 முதல் ரூ.6900 வரையிலும்,  பச்சை ரக நிலக்கடலை ரூ. 6080 முதல் ரூ.6200 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ. 50 லட்சத்துக்கு  ஏலம் நடைபெற்றது.  இதில் 360 விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags : Groundnut auction ,
× RELATED இந்தியாவில் 60 லட்சம் பேருக்கு கொரோனா;...