×

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர், அக். 2:   திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்ைச பெற்று வரும் நோயாளிகளை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று நேரில் சந்தித்து சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள உயிர்காக்கும் மருந்துகள் தொடர்பாகவும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், டெங்கு காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மருத்துவமனை வளாகத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திட மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து தென்னம்பாளையம் நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சக்கரை, அரிசி, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள், மின்னனு எடை இயந்திரத்தின் செயல்பாடு மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags : Collector ,Inspection ,Government Hospital ,
× RELATED திருவேற்காட்டில்...