×

ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி

திருப்பூர், அக். 2:ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்ததாக தம்பதி மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். திருப்பூர் கல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (55). இவரது மனைவி பானுமதி (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தைவேல் அரிசிக்கடை, மணல் விற்பனை, மாதாந்திர ஏலச்சீட்டு போன்ற பல தொழில்களை செய்துவந்துள்ளார். இந்த தம்பதியிடம் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதச்சிட்டிற்கு பணம் கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக சீட்டு முடிந்த நிலையில் சீட்டிற்கு பணம் கட்டிய பொதுமக்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.  இதனால் பொதுமக்கள் தினசரி குழந்தைவேலுவின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டுவந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குழந்தைவேலு, பானுமதி ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுமார் 30 பேர் திருப்பூர் மாநரக போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் பல கோடி மோசடி செய்த குழந்தைவேலு, பானுமதி ஆகியோரிடம் இருந்து பணம் பெற்று தரும் படியும், மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் மனு அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : bidders ,
× RELATED தர்மபுரியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி...