×

வாடிக்கையாளர் மேம்பாட்டு முயற்சி திட்டம்

ஊட்டி, அக். 2: வங்கி வாடிக்கையாளர்களுக்கான மேம்பாட்டு முயற்சி திட்ட முகாம் இன்றும், நாளையும் ஊட்டியில் நடக்கிறது. மாவட்ட முன்னோடி வங்கி மண்டல மேலாளர் ராஜ்குமார் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் வாடிக்கைாயாளர்களின் பல்வேறு கடன் ேதவைகளை பூர்த்தி செய்ய நிதித்துறை, மத்திய அரசின் ஆணைப்படி வாடிக்கையாளர்களுக்கான மேம்பாட்டு முயற்சி திட்ட முகாம் 3ம் தேதி (இன்று) நாளை ஆகிய இரு நாட்கள் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அனைத்து வங்கிகள் சார்பில் நடக்கிறது.

எனவே, விவசாய தொழில் முைனவோர்கள் மற்றும் அனைத்து வகை கடன் வழங்கும் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். இந்த முகாமில், கலந்து கொள்பவர்கள் தங்களுக்கு தேவையான கடன் பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு  ராஜ்குமார் கூறியுள்ளார்

Tags :
× RELATED சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்