×

பிளாஸ்டிக் இல்லாத இந்தியா வலியுறுத்தி எஸ்.பி.ஐ ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு

கோவை, அக்.2: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாதவை இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்தை வலியுறுத்தி கோவையில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் மனித சங்கிலி அமைத்து விழிபுணர்வு நடத்தினர். கோவை எஸ்பிஐ தலைமை வங்கி முன் நடந்த மனித சங்கிலிக்கு எஸ்பிஐ நிர்வாக அலுவலக துணை பொது மேலாளர் சத்ய பிரகாஷ் தலைமை வகித்தார். எஸ்பிஐ வங்கி கிளைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதில் பிராந்திய மேலாளர்கள் ஜோசப் கிறிஸ்டி, பாலசுப்ரமணியம், ராஜேந்திரன், உதவி பொது மேலாளர் ஜானகிராமன், சாந்தகுமாரி, முதன்மை மேலாளர்கள் சீதாராமன், பன்னீர் செல்வம், அதிகாரிகள் சங்க தலைவர் ராஜவேலு, ஊழியர் சங்க தலைவர் ரவிக்குமார் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : SBI ,Stress Human Chain ,India ,
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...