×

கொங்குநாடு மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் இருதய பரிசோதனை

கோவை, அக்.2: கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே அமைந்துள்ளது கொங்குநாடு மருத்துவமனை. 250 படுக்கை வசதிகளுடன் எல்லாவிதமான பரிசோதனை வசதிகளுடன், எல்லாவிதமான நோயாளிகளுக்கும், அதற்கேற்ப கைதேர்ந்த அனுபவமிக்க சிறப்பு டாக்டர்களை கொண்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு உலக இருதய தினத்தையொட்டி ரூ.15 ஆயிரம் கட்டணமுள்ள ஆஞ்சியோகிராம் பரிசோதனை ரூ.9 ஆயிரம் சலுகை கட்டணத்திலும், இருதய முழு உடல் பரிசோதனை ரூ.2,500 கட்டணத்திலும் செய்யப்படுகிறது. இந்த சலுகை வரும் 4ம் தேதி வரை வழங்கப்படுகிறது. ஆஞ்சியோகிராம் செய்ய வருபவர்கள் இதற்கு முன்பு பார்த்த இருதய மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட்களை கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு 99941 58127, 73588 41222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Tags : examination ,
× RELATED புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி