×

கோவையில் போலி பட்டாசுகள் விற்பனை

கோவை, அக்.2: கோவை மாவட்டத்தில் ஆன்லைனில் போலி பட்டாசுகள் விற்பனையை தடுக்க கோரி பட்டாசு விற்பனையாளர்கள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். இது குறித்து கோவை மாவட்ட பட்டாசு விற்பனை மற்றும் சிறு வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் சரத் விக்னேஷ், அசோக், லோகநாதன் ஆகியோர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் 450க்கும் மேற்பட்ட இடங்களில் எங்களது சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தற்காலிக உரிமம் பெற்று பட்டாசு விற்பனை செய்து வருகின்றனர்.

இதை சீர்குலைக்கும் வகையில் சங்கனூரை சேர்ந்த நாகராஜ் என்பவர் கண்ணன் பட்டாசு கடை என்ற பெயரில் எவ்வித உரிமம் இல்லாமலும், ஆன்லைன் புக்கிங் ஆபிஸ் வைத்து கோவையில் வியாபாரம் செய்து வருகிறார். கோவை மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Goa ,
× RELATED கோவையில் ஓட்டுக்கு ரூ.2000 பிடிபட்ட பாஜ நிர்வாகி