பாஜ பாத யாத்திரை இன்று துவக்கம்

ஈரோடு, அக். 2: பாஜ சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (2ம் தேதி முதல்) பாத யாத்திரை நடைபெற உள்ளது. இதுகுறித்து பாஜ மாநில பிரசார அணி தலைவர் சரவணன்  கூறியிருப்பதாவது: காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தியின் கொள்கைகளை வலியுறுத்தி பாஜ சார்பில் பாத யாத்திரை நடைபெற உள்ளது. இன்று காலை ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு துவங்கும் இந்த பாத யாத்திரை, ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் 15 நாட்களுக்கு நடக்கும். இதில் கட்சி நிர்வாகிகள், பொது நல அமைப்பினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories:

>