×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக். 2:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிபாரதி முன்னிலை வகித்தார்.ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்று ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் மற்றும் 17பி குற்றச்சாட்டு வழங்குவதையும் கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மத்திய அரசு வழங்குவதை போல மாநில அரசும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவபடி வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகை மற்றும் ஏபிசிடி பிரிவு ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை போனசாக வழங்க வேண்டும். அரசாணை 56யை ரத்து செய்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காப்பீட்டு திட்ட குறைதீர்க்கும் கூட்டத்தையும், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் காலமுறை கூட்டத்தையும் முறையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Pensioners ,
× RELATED ஓய்வூதியர் சங்க கூட்டம்