×

தேசிய ஊட்டச்சத்து மாத விழா

ஈரோடு, அக்.2: ஈரோடு சக்தி தேவி அறக்கட்டளை, மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். சக்திதேவி அறக்கட்டளை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பாமாசேகர்  முன்னிலை வகித்தார். ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான சரிவிகித உணவு குறித்து பெற்றோர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சோளம், கம்பு, வரகு, சாமை திணை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.அனைவருக்கும் முருங்கை சூப், சிறுதானிய பாயாசம் வழங்கப்பட்டது. சக்தி சிறப்பு பள்ளி மற்றும் மறுவாழ்வு மைய பணியாளர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : National Nutrition Month Festival ,
× RELATED கொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது