×

பெண்ணை மிரட்டி 2 பவுன் செயின் பறிப்பு முகமூடி கொள்ளையர் அட்டகாசம்

பெரம்பலூர், அக். 2: பெரம்பலூரில் பெண்ணின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை முகமூடி கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சங்கீதா. இவர் கடந்த 29ம் தேதி இரவு வீட்டின் பின்புறம் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த 3 மூகமூடி கொள்ளையர்கள், சங்கீதா கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தனர்.அப்போது சங்கீதா கூச்சல் போட்டார். இந்த சத்தம் கேட்டு ராஜா ஓடி வந்தார். அப்போது முகமூடி கொள்ளையர்கள் 3 பேரும் அங்கு பக்கெட்டில் இருந்த தண்ணீரை எடுத்து ராஜா முகத்தில் ஊற்றி விட்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.டிஎஸ்பி ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் வழக்குப்பதிந்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Bow St. Flush Masked Robbery Attacks Girl ,
× RELATED ஓசூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.: 2 பேருக்கு லேசான காயங்கள்