குண்டவெளியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் முகாம்

ஜெயங்கொண்டம்,அக்.2: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் குண்டவெளி ஊராட்சியில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய பொறுப்பாளர் மணிமாறன் தலைமை வகித்தார். முகாமை மாவட்ட செயலாளர் சிவசங்கர் துவக்கி வைத்தார். முகாமில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லூயிகதிரவன், கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் குலோத்துங்கன், ஜெயங்கொண்டம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சிவகுருநாதன், ராமசாமி, செல்வராஜ், சேட்டு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், மதியழகன், விஜயகுமார், ராஜா, மதியழகன், ராஜி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags : DMK ,youth membership camp ,Kundaveli ,
× RELATED கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு...