×

நாட்டார்மங்கலத்தில் கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

பாடாலூர், அக். 2: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் விவசாய கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்.ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. இதுபோல் வந்து செல்லும்போது நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் ஒரு மயில் உள்ளே சென்று விட்டது. பின்னர் அந்த மயில் மேலே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், அந்த மயிலை மேலே தூக்கிவர முயன்றனர். ஆனால் அந்த மயில் இளைஞர்களை கொத்துவதற்காக வந்ததால் அவர்கள் பயந்து மேலே வந்து விட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து அந்த மயிலை கயிற்றில் கட்டி கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலே வந்தவுடன் அந்த மயில் பறந்து சென்றது.

Tags : Natharmangalam ,
× RELATED ராஜபாளையத்தில் மழையால் நிரம்பியது...