பாடாலூர் அருகே திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது

பாடாலூர், அக். 2: அருணகிரிமங்கலம் கிராமத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆலத்தூர் தாலுகா அருணகிரிமங்கலம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் அதே கிராமத்தை சேர்ந்த கென்னடி என்பவர் வீட்டின் அருகே மர்மநபர்கள் 3 பேர், கடப்பாரை மற்றும் பூட்டை உடைப்பதற்கான கருவிகளை வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், கென்னடி வீட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மர்மநபர்கள் நின்று கொண்டிருந்ததை பார்த்து சந்தேகமடைந்து கிராம மக்கள் உதவியுடன் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து 3 பேரையும் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து 3 பேரிடம் குன்னம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சிறுவானூரை சேர்ந்த ஞானசேகர் மகன் உதயசூரியன் (26), அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார் மகன் முகில்குமார் (25), தஞ்சையை சேர்ந்த பாண்டியன் மகன் தர்மராஜ் (26) என்பதும், அவர்கள் திருட முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் விசாரணையில் உதயசூரியன், முகில்குமார் மீது பல திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உதயசூரியன், முகில்குமார், தர்மராஜ் ஆகியோரை கைது செய்து குன்னம் இன்ஸ்பெக்டர் கதிரவன் விசாரித்து வருகி–்ன்றனர்.

Tags : persons ,robbery ,Patalur ,
× RELATED சென்னையை அடுத்த அயனம்பாக்கத்தில்...