×

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்,அக்.2: பெரம்ப லூரில் நகராட்சி நிர்வாகம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மாஸ் கிளீனிங் எனப்படும் தூய்மைப் பணி மேற்கொள்ளும் நிக ழ்ச்சிகள் நடைபெற்றது.பெரம்பலூர் நகராட்சி நிர் வாகமும், ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா பெரம்பலூர் கிளையும் இணைந்து பெர ம்பலூர் நகரில் பிளாஸ் டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை மேற்கொண்டன. இதனை யொட்டி நேற்றுமாலை 5 மணிக்கு பாலக்கரையில் பேரணி தொடங்கியது. இந் தப் பேரணியை நகராட்சி ஆணையர் (பொ) ராதா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தி யா முதன்மை மேலாளர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சாந்தா, எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணி வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, பெரியகடைவீதி, வழியாக பழைய பஸ்ஸ்டாண்டு காந்தி சிலையின் முன்பு முடிவடைந்தது. பேரணியில் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் பன்னீர் செல்வம், கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் துப்புரவுப் பணி யாளர்கள், அம்மா உணவக பணியாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்தப்பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணியின்போது சாலை யோரங்களில் நின்ற பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிபுணர்வு குறி த்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணியின் முடிவில் பெரம்பலூர் பழைய பஸ்டாண்டு பகுதி க்குள் மாஸ் கிளீனிங் எனப்படும் தூய்மைப் பணிகள் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களால் மேற் கொள்ளப்பட்டது.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது