×

மழையால் நோய்கள் பரவும் அபாயம் கரூர் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கரூர், அக். 2: கரூரில் பரவலாக மழை பெய்து வருகிறது. தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.கரூர் நகராட்சியில் கொசுஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சியில் உள்ள 48 வார்டுகளை ஒன்பது மண்டலமாக பிரித்து 225 ஊழியர்கள் கொசுஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுவீடாக சென்று அபேட் எனப்படும் மருந்து குளோரின் பவுடர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Tags : municipality ,Karur ,
× RELATED சிவகங்கை நகராட்சியில் தேங்கும் கழிவு...